அப்பாவான சிவகார்த்திகேயன்: பெண் குழந்தை பிறந்துள்ளது
மதுரை: சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கோலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவராக உள்ளவர் சிவகார்த்திகேயன். மனிதர் கோடிகளில் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. அவரோ நான் சம்பளத்தை விட கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று கூறி வருகிறார்.


சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்த காலத்திலேயே தனது மாமா மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். கர்ப்பிணியாக இருந்த ஆர்த்தி மதுரையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றிருந்தார். சிவகார்த்திகேயன் மான் கராத்தே படப்பிடிப்பில் இருந்தார். இந்நிலையில் இன்று காலை ஆர்த்தி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து அப்பாவாகியுள்ள சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.
Tags: ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply