கவுதம் மேனன் படத்திலிருந்து விலகியது ஏன்?- சூர்யா பரபரப்பு பேச்சுசென்னை: கவுதம் மேனன் படத்திலிருந்து விலகியது குறித்து வெளிப்படையாக, ஆனால் அவர் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார் சூர்யா. ஜன்னல் ஓரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "சில விஷயங்களில் வெளிப்படையா இந்த மேடையில் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். 

கரு பழனியப்பன் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் பார்த்திபன் கனவு படத்தில் ஜோதான் நடிப்பதாக இருந்தது. அந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் ரொம்ப பீல் பண்ணுவாங்க ஜோ. அவருடைய நட்புக்காகத்தான் நான் வந்தேன். பிரெண்ட்ஷிப் எப்படிப்பட்டதுன்னு எனக்குத் தெரியும். அது வேலை, தொழிலைவிட உயர்ந்தது.

 அதனாலதான் சமீபத்துலகூட ஒரு முக்கியமான முடிவை எடுத்தேன். அந்த உறவு பிரியாது, பாதிக்காது. நிச்சயம் தொடரும். அடுத்த வருஷம் மீண்டும் ஒரு சிறந்த படத்தோட நான் வந்து உங்களை சந்திப்பேன். அதுக்காக எடுத்த ஒரு இடைவெளியுடன் கூடிய முடிவுதான் அது. ரெண்டு பேருமே ஒருத்தர் மீது ஒருத்தர் மரியாதை வச்சிருக்கோம்," என்றார். இதில் எந்த இடத்திலும் அவர் வெளிப்படையாக கவுதம் மேனன் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


Tags: ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply