பல்கேரியாவுக்கு பதில் ஐப்பானில் காஜலுடன் விஜய் டூயட்


சென்னை: ஜில்லா படக்குழுவினர் பாடல் காட்சியை படமாக்க பல்கேரியா செல்வதாக இருந்தது. விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் ஜில்லா படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. 


படத்தின் டூயட் பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் அடுத்த மாதம் பல்கேரியா செல்கின்றனர் என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் பல்கேரியாவுக்கு பதில் ஜப்பான் செல்கிறார்களாம். இது குறித்து இயக்குனர் நேசன் கூறுகையில், நாங்கள் பல்கேரியா செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் அங்குள்ள கிளைமேட் படப்பிடிப்புக்கு ஏற்றவாறு இல்லை. 


அதனால் நாங்கள் ஜப்பான் செல்கிறோம். அங்கு ஒசாகா மற்றும் சில இடங்களில் டூயட் பாடலை படமாக்குகிறோம். இந்த மாத இறுதியில் ஜப்பானில் படப்பிடிப்பு துவங்கும் என்றார். 


Tags: ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply