சொல்வதற்கு அஞ்சேல்... வினு சக்கரவர்த்தி பேசுகிறார்!
சத்யம் டிவியின் சொல்வதற்கு அஞ்சேல் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடிகர் வினு சக்கரவர்த்தி கலந்து கொண்டு மனம் திறக்கிறார். சத்யம் டிவியில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் எட்டரை மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் சொல்வதற்கு அஞ்சேல்.


 இதன் மறு ஒளிபரப்பு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் ஒன்றரை மணி வரை இடம் பெறும். சமூகத்தில் பிரபலமானவர்களைச் சந்தித்து அவர்கள் துறை தொடர்பான தகவல்களைக் கேட்டு மக்களிடம் கொண்டு செல்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

 மேலும் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் அவரவர் சார்ந்த துறை பிரச்சினைகள் குறித்தும் இதில் கேட்கப்படும். இந்த வாரம் வினு சக்கரவர்த்தி இதில் கலந்து கொண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். சினிமாத் துறையில் தான் சந்தித்த ஏற்றங்கள், இறக்கங்கள், அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


Tags: , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply