என் மகளுக்கு இன்னும் திருமண வயசே வரலியே! - ராதா

.

சென்னை: என் மகள் கார்த்திகாவுக்கு திருமணம் என்று வரும் செய்திகள் உண்மையில்லை. அவளுக்கு இன்னும் திருமண வயதே வரவில்லை என்று நடிகை ராதா தெரிவித்துள்ளார்.

 பழைய நடிகை ராதாவின் மகளும், நடிகையுமான கார்த்திகாவுக்கு தமிழ் - தெலுங்கில் புதிதாகப் படங்களே இல்லாததால் திருமணம் செய்யப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.  

கார்த்திகா 'கோ' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியால், இவர் தமிழில் பெரிய அளவுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டார். 


ஆனால் பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் நடித்த பிறகு, எதிர்பார்த்தபடி கார்த்திகாவுக்கு படவாய்ப்புகள் வரவில்லை. ஹன்சிகா, அமலாபால், காஜல் அகர்வால் போன்றோருக்கு படங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தப் போட்டியில் தாக்குப்பிடிக்காமல் ஒதுங்கி நிற்கிறார் கார்த்திகா.  


இந்த நேரத்தில் திருமணச் செய்தி வெளியானதால், உண்மை என்றே பலரும் நம்பினர். - 


திருமணம் பற்றி வெளியான செய்தி குறித்து ராதாவிடம் கேட்டபோது, "என் மகள் கார்த்திகாவுக்கு திருமணம் செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கார்த்திகாவுக்கு 21 வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்வதற்கான வயதே வரவில்லை. நான்கு வருடத்துக்கு பிறகுதான் கார்த்திகா திருமணம் பற்றி சிந்திப்போம்.  


எனது அக்கா மல்லிகா மகள் வினிதாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. கேரளாவில் வருகிற 26-ந்தேதி இந்த திருமணம் நடக்கிறது. இதை வைத்து கார்த்திகாவுக்கு திருமணம் நடக்கிறது என்று தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.  


கார்த்திகா பற்றி உண்மைக்கு மாறாக செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.Tags: ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply