அப்பா கமல் ஜோடியாக நடித்தவரின் மகனை காதலிக்கும் அக்ஷரா ஹாஸன்
மும்பை: கமலின் இளைய மகள் அக்ஷரா நடிகை ரதியின் மகன் தனுஜ் விர்வானியை காதலிக்கிறாராம். கமலுடன் உல்லாச பறவைகள், ரஜினியுடன் முரட்டுக் காளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரதி. பஞ்சாபி பெண்ணான ரதி தமிழ் தவிர இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். பின்னர் தொழில் அதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்து கொண்டு தனுஜ் என்ற மகனுக்கு தாயானார். இந்நிலையில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தனுஜை காதலிப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. 

தனுஜ் லவ் யூ சோனியோ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். மும்பையில் தாய் சரிகாவுடன் தங்கியிருக்கும் அக்ஷரா முன்னதாக பிரபல இந்தி நடிகர் நசீருத்தின் ஷாவின் மகன் விவான் ஷாவை காதலிப்பதாக கூறப்பட்டது. பல இடங்களுக்கு அவர்கள் ஜோடியாக சென்று வந்தனர்.

அக்ஷரா தற்போது ஆர். பால்கியின் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply