வீடு புகுந்து ஸ்ருதி ஹாஸனை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்... பாலிவுட்டில் பரபரப்பு!மும்பை: கமல் ஹாஸன் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவலாளிகள் விரட்டியுள்ளனர். ஸ்ருதி ஹாஸன் அவரிடமிருந்து விலகி, அந்த நபரை பாதுகாவலர்கள் துணையுடன் விரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் இன்னும் பதிவாகவில்லை.

ஆனால் இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளாராம் ஸ்ருதி. இந்தியில் பிஸியான நடிகையாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு நபர் பின்தொடர்ந்து வந்தாராம். ராமய்யா வஸ்தாவய்யா படப்பிடிப்பின்போது ஸ்ருதியை அவர் நெருங்க முயன்றுள்ளார். ஆனால் படக்குழுவினர் விரட்டியடித்துவிட்டனர். 


இந் நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாந்த்ராவில் ஸ்ருதி தங்கியுள்ள வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, பாதி தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். 

உடனே சட்டென்று உள்ளே நுழைந்த அந்த நபர், ஸ்ருதியை கட்டிப்பிடித்து, கழுத்தை நெறிக்க முயன்றாராம். உடனே சுதாரித்துக் கொண்ட ஸ்ருதி, அந்த நபரை பலமாக வெளியில் தள்ளி கதவை தாழிட முயன்றாராம். அதே நேரம் பலமாகக் குரலெழுப்பி செக்யூரிட்டிகளை அழைத்துள்ளார்.

 அவர்கள் வந்து அந்த நபரைப் பிடித்து இழுத்து விரட்டியடித்துள்ளனர். ஸ்ருதியின் மும்பை ஏஜென்ட் இத்தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த நபர் யார், ஸ்ருதியைக் காதலித்த ரசிகரா... ஸ்ருதியின் மீதான தனிப்பட்ட பகை காரணமா என்பது குறித்து எதுவும் தெரியாது என அந்த ஏஜென்ட் தெரிவித்தார். ஆனால் தங்களுக்கு இதுபற்றி எந்த புகாரும் வரவில்லை என்று மும்பை போலீஸ் துணை கமிஷனர் செர்ரிங் டோர்ஜ் தெரிவித்தார். 


Tags:

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply