சிரிக்க வைக்கும் சிங்காரம் தெரு
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் புதிய நகைச்சுவை தொடர் ‘‘சிங்காரம் தெரு'' தங்களின் ரசனைக்கேற்ப அமைந்துள்ளது என்கின்றனர் ரசிகர்கள். தமிழ் சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு பல காமெடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். விஜய் டிவியில் புதியதாக சிங்காரம் தெரு என்ற காமெடி சீரியலை கடந்த வாரம் முதல் தொடங்கியுள்ளனர்.


ஒரு காலனியில் வசிக்கும் வெவ்வேறு விதமான மனிதர்கள் செய்யும் சிறு தவறுகளுக்குக்கூட அவர்கள் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது, அங்குள்ள காவலர்களிடம் மல்லுக்கட்டுவது தொடரில் நகைச்சுவையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த காலனியில் வசிக்கும் ஐந்து குடும்பங்களில் உள்ளவர்கள் அடிக்கும் லூட்டிகளும் நகைச்சுவையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ‘லொள்ளு சபா' மூலம் பிரபலமான இயக்குனர் ராம்பாலா இயக்கும் இத்தொடர், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 
Tags: ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply