நீட் ஃபார் ஸ்பீடு
நடிகர் : ஆரூண் பால்நடிகை : இமோஜேன் பூட்ஸ்இயக்குனர் : ஸ்காட் வாக்இசை : நாதன் பர்ஸ்ட்ஓளிப்பதிவு : சேன் ஹர்ல்பட்
ஹீரோ மார்ஷல் உள்ளூர் அளவில் கார் ரேஸ் வீரராக இருக்கிறார். நண்பர்களோடு சேர்ந்து ரேஸ் கார்கள் தயார் செய்தும் கொடுக்கிறார்.  மார்ஷலின் நண்பர் பீட்டும் ஒரு ரேஸ் வீரர். அவருடைய சகோதரி அனிதா, வில்லன் டினோவின் காதலி. டினோ மிகப்பெரும் பணக்காரரும் கார் ரேஸ் வீரரும் ஆவார். அவருக்கும் ஹிரோவுக்கும் பகை இருக்கிறது. 

இந்நிலையில், டினோ தன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த ரேஸ் காரை சரி செய்து தந்தால் 5 லட்சம் டாலர் தருவதாக மார்ஷலிடம் கூறுகிறார். பணகஷ்டத்தில் இருக்கும் மார்ஷலும் அவரது நண்பர்களும் இதற்கு சம்மதிக்கிறார்கள். சரிசெய்த அந்த காரை டினோ ஜூலியாவிடம் விற்கிறார். சொன்னதைவிட அந்த காரின் வேகத்தை அதிகம் வைத்து தயாரித்ததால், ஜுலியாவிடம் இருந்து இன்னும் அதிகபடியான பணம் டினோவுக்கு கிடைக்கிறது. 

ஒருகட்டத்தில் மார்ஷலுக்கும் டினோவுக்கும் மோதல் ஏற்பட அவர்களுக்குள் கார் பந்தயம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர். அதில் மார்ஷலின் நண்பரான பீட்டரும் கலந்து கொள்கிறார். அந்த போட்டியில் டினோவால் பீட் இறக்க நேரிடுகிறது. அந்த கொலை பழி மார்ஷல் மேல் விழுகிறது.

ஜெயிலுக்கு சென்று பரோலில் வரும் மார்ஷல் டினோவை பழி வாங்க, அவர் கலந்து கொள்ளும் கார் ரேஸில் கலந்துகொள்ள செல்கிறார். மார்ஷல் அந்த கார் ரேஸில் கலந்து கொள்ளக்கூடாது என்று டினோ அவருக்கு நிறைய நெருக்கடிகளை தருகிறார். அதிலிருந்து மீண்டு கார் ரேஸில் ஜெயித்து தன் மேல் விழுந்த கொலைப் பழியை மார்ஷல் தீர்ப்பதே முடிவு. 

ஹீரோ மார்ஷல் படத்தின் ஆரம்பத்திலிருந்தே ரேஸ் வீரர் போன்றுதான் இருக்கிறார். கார் ரேஸ் தவிர வேறு காட்சிகள் குறைவுகள் என்பதால் நன்றாக கார் ஓட்டியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். 

மார்ஷல் தயார் செய்து தந்த காரை விலைக்கு வாங்கி பனி அதே காரை மார்ஷல் ரேஸில் கலந்துகொள்ள தந்து உதவி, பின் காதலியாக மாறும் கதாபாத்திரத்தில் ஜூலியா. மார்ஷலோடு ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் ஹாலிவுட் டச். அதேபோல் காரில் செல்லும்போதே அவர் காருக்கு பெட்ரோல் போடும் காட்சியில் கைதட்ட வைக்கிறார். 

டினோ தமிழ் பட வில்லன் போல மிரட்டிக்கொண்டே இருந்து இறுதியில் அடி வாங்கி போகிறார். மார்ஷலின் நண்பர்களின் பென்னியும், பின்னும் ரசிக்க வைக்கிறார்கள். அதிலும் ‘பின் தான் வேலையை விடும் காட்சியில் அலுவலகத்தில் செய்யும் ரகளை ரசிக்க வைக்கிறது. 

ஒளிப்பதிவாளர் ஷேன், எடிட்டர் பால் இருவரும் சேர்ந்து கார் ரேஸ் காட்சிகளை இருக்கைக்கு வரவழைக்கிறார்கள். நாதன் ரொமான்ஸ் காட்சிக்கும் ஆக்ஷன் காட்சிக்கும் தேவையான இசையை கொடுத்திருக்கிறார். 

இயக்குனர் ஸ்காட் ஏற்கெனவே ஹாலிவுட்டில் ஸ்டண்ட் இயக்குனர் என்பதால் காட்சிகள் ஒவ்வொன்றும் பற பற என்று பறக்கிறது. லாஜிக் மட்டும் பார்க்கவில்லையென்றால் இந்த படத்தை ரசிக்கலாம். 

மொத்தத்தில் ‘நீட் ஃபார் ஸ்பீடு’ நேர்த்தியான வேகம்.
Tags: ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply