'அஞ்சான்' தோல்வியால் 'மாஸ்' படத்தில் இருந்து விலகுகிறாரா வெங்கட் பிரபு? கோலிவுட் அதிர்ச்சி

சூர்யா,சமந்தா நடிப்பில் கடந்த சுதந்திர தினத்தில் வெளியான அஞ்சான் திரைப்படம் எதிர்பாராத நிலையில் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் தற்போது சூர்யாவை வைத்து மாஸ் படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன.

சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன் நடிப்பில் வெங்கட்பிரபு 'மாஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அருகேயுள்ள ஈகா தியேட்டரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த ரசிகர்கள் 'அஞ்சான்' படத்தில் வரும் பஞ்ச் டயலாக்குகளை கூறி சூர்யாவை வெறுப்பேற்றிக்கொண்டு இருந்ததாகவும் இதனால் கடுப்பான சூர்யா படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வேகமாக சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

'அஞ்சான்' திரைப்படத்தில் சூர்யா பேசும் ஒரு பஞ்ச் டயலாக் இதுதான். நான் சாகனும்னாலும் நான் தான் முடிவு பண்ணுவேன். நீ சாகனும்னாலும் அதையும் நான் தான் முடிவு பண்ணுவேன்' என்பது. இந்த டயலாக்கை படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த சில ரசிகர்கள், "அஞ்சான் தோல்வி அடைஞ்சாலும் அதுக்கு சூர்யாதான் காரணம், மாஸ் தோல்வி அடைஞ்சாலும் அதுக்கும் சூர்யாதான் காரணம்' என்று கூறியதாகவும் அதனால்தான் சூர்யா கடுப்பாகி உடனே படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உடனடியாக வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மங்காத்தாவுக்கு பிறகு சூர்யாவின் தம்பி கார்த்திக்கை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய பிரியாணி படம் பெரும் தோல்வியை சந்தித்தது. தற்போது அஞ்சான் படுதோல்வி அடைந்துள்ளதால் சூர்யாவை ரசிகர்கள் கலாய்ப்பதை பார்த்தால் வெங்கட்பிரபு படத்தை ரத்து செய்துவிடுவார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்க கிளம்ப ஆரம்பித்துவிட்டது. ஆனால் வெங்கட்பிரபு தரப்பு இதை கடுமையாக எதிர்த்துள்ளது. சூர்யா மிகச்சிறந்த நடிகர். எத்தனையோ மெகா ஹிட் படத்தை கொடுத்த ஒரு படம் தோல்வி அடைந்ததால் துவண்டு விடமாட்டார். மீண்டும் மாஸ் படத்தில் பழைய சூர்யாவை ரசிகர்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள் என்று கூறிவருகிறது மாஸ் படக்குழு.

Tags: , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply