Type Here to Get Search Results !

சிம்பு படத்தில் நடிக்கவுள்ள மஹத்...!

ஜில்லா படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்த மஹத் விரைவில் பக்கா கமர்ஷியல் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

படத்தின் பெயர் சிம்பு. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், பாதாம் பிஸ்தா என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறேன். பாதாம் பிஸ்தா ரொமாண்டிக் காமெடி படம். சென்னை ஸ்லாங் பேசும் லோக்கல் பையனாக நடிக்கிறேன். செல்வராகவன், ஐஸ்வர்யா தனுஷிடம் பணியாற்றிய மைக்கேல் இயக்குகிறார்.

அதற்கு பிறகு நான் நடிக்க இருக்கிற படம்தான் சிம்பு. இது பக்கா கமர்ஷியல் படம். ஆக்ஷன் ரொமாண்டிக் காமெடி கலந்த படம். முதன் முறையாக அடித்து வெளுக்கும் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறேன். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று சிக்ஸ் பேக் வைக்க ஒர்க்கவுட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

படத்தின் பட்ஜெட்டும் பெருசு. எனது கேரியரில் சிம்பு பேசப்படுவதாக இருக்கும். படத்தின் பெயர் காரணம் உள்ளிட்ட மற்ற விபரங்கள் முறைப்படி அறிவிக்கப்படும் என்கிறார் மஹத்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.