இன்னும் சில தினங்களில் வெளிவரவுள்ள விஜய் பாடிய பாடல்...!

ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தை தயாரிக்கும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்று சொல்லப்படுகிறது.

எனவே கத்தி படத்துக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே ஒலிக்கத்தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம், இந்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் பற்றி கவலையேப்படாமல் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் தயாராகி வருகிறது கத்தி படம். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் விஜய்யுடன் முதன் முதலாக இணைந்துள்ளார் இசை அமைப்பாளர் அனிருத். எனவே பல நாட்கள் மெனக்கெட்டு, இந்தப் படத்திற்காக சிறப்பான ட்யூன்களை உருவாக்கியிருக்கிறாராம்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் அனிருத். கத்தி படத்திற்கான பாடல்களின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் இசையில் ரசிகர்களுக்கு நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. விஜய் சார் பாடவிருக்கும் பாடலும் ரெடியாகி விட்டது.

அந்தப் பாடலின் பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். கத்தி பாடல் வெளியீட்டு விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) இராண்டாம் வாரத்தில் நடைபெறவிருக்கிறது. கத்தியின் மொத்த இசையையும் உங்களிடம் சமர்ப்பிக்க கத்தி படக் குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள், காத்திருங்கள் என்று கூறியிருக்கிறார் அனிருத்.


Tags: , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply