அஜித் எனும் விளம்பர பிரியர் !

சமீபத்தில் வெளியான புது படம் எதையாவது  பாத்தீர்கள் என்றால் அதில் கண்டிப்பாக அஜித் புகழ் பாடும் வசனம் இடம்பெற்றிருக்கும். ஆம்! இப்படித்தான் போய் கொண்டிருகின்றது தமிழ் சினிமா இன்று. அப்படி என்னதான் அஜித் சாதித்து விட்டார் என்று ஆராய்ந்தால் அதற்கு பதில் எதுவும் இல்லை என்பது தான் நிதர்சனம். ஆனால் அஜித் இப்படியென்றும் அப்படியென்றும் துதிபாடும் இடம் வசனங்களை உட்புகுத்தியபடியே தான் உலாவருகின்றன பல திரைப்படங்கள்.

        இதன் பின்னூட்டத்தையும், இதற்கு பின்னான அரசியலையும் ஆராய்ந்தால் , சினிமா படைப்பாளிகள் எவரும் தானாக முன்வந்து அஜித்தை துதி  பாடுவதில்லை என்பது வெட்டவெளிச்சமாகிறது.. அந்த அளவிற்கு அவர் எதையும் பெரிதாக சாதித்துவிடவில்லை என்பதால் அந்த உட்புகுத்தல்கள் மிக செயற்கையாகவும் , நகைப்புக்குரியதாகவும் மட்டுமே தோன்றுகின்றன. இதன் பின்புலம் என்னவென்று பார்த்தால், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவால் கொடுக்கப்படும் அழுத்தமும், வற்புறுத்தலுமேயாகும்.

           அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா , தான் PRO வாக பணியாற்றும் எல்லா திரைப்படங்களிலும், இயக்குனர்களை வற்புறுத்தி அஜித்தைப்பற்றி புகழாரம் பாட வைப்பதை விளம்பர யுக்தியாக வைத்திருக்கிறார்.  தல பற்றி இப்படி ஒரு வசனம் வையுங்கள் அப்படி ஒரு வசனங்கள் வையுங்கள் அவ்வாறு செய்தால் உங்களுக்கு அஜித்திடம் கதை சொல்ல ஏற்பாடு செய்வதாகச்சொல்லி அவர்களை ஏமாற்றி வருகிறார்.  இந்த விவகாரம் தற்போது கோலிவுட்டில் புதிதாக வந்திருக்கும் இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

தனக்கு விளம்பரம் பிடிக்காது விளம்பரம் பிடிக்காது என்று சொல்லியே அந்த விளம்பரத்தை செய்தி தாள்களில் வர வைப்பவர் தான் அஜித் என்று நம்மில் பலருக்கு தெரிந்த விடயமே. கடந்த சில ஆண்டுகளாக அஜித் தரப்பு செய்து வந்த இந்த சினிமா வசனம் விவகாரம் இப்போது வெளியே கசிந்து விட்டதால் அடுத்த கட்ட விளம்பர யுத்தி யை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டிருப்பார்கள் அஜித்தின் 10 பேர் கொண்ட குழுவினர்.Tags: , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply