த்ரிஷா தான் எனக்கு எல்லாம் – சோனியா அகர்வால்

‘காதல் கொண்டேன்‘, ‘7ஜி ரெயின்போ காலனி‘, ‘திருட்டுபயலே‘ உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சோனியா அகர்வால். அவர் கூறியதாவது: சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு என் அம்மா எனக்கு தந்த ஊக்கம்தான் காரணம்.


எனது எல்லா பிரச்னைகளையும் அவரிடம் பகிர்ந்துகொள்வேன். தற்போது அவர் சண்டிகரில் வசிக்கிறார். ஆனாலும் தினமும் 5 மணிநேரமாவது அவருடன் போனில் பேசிவிடுவேன். இதுவரை நான் நடித்த படங்களிலேயே மிகவும் பிடித்தது 7ஜி ரெயின்போ காலனி படம்தான். எனது நிஜ கேரக்டரை போன்றே அது அமைந்திருக்கும். 

திரையுலகில் எனக்கு இருக்கும் இரண்டு தோழிகள் த்ரிஷா, வரலட்சுமிசரத். அவர்கள் இருவரும் எது சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் குருட்டுத்தனமாக அப்படியே நம்பிவிடுவேன். தமிழ் சினிமாதான் என்னை தன்னம்பிக்கையுள்ள நடிகையாக மாற்றியது. என் வாழ்வில் எவ்வளவோ சவால்கள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் துணிச்சலாக சந்திக்கும் சக்தியை தமிழ் திரை உலகம் தான் தந்தது. இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.

Tags:

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply