அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு விஷால்தான்... இளையதளபதியெல்லாம் சும்மா!- விக்ராந்த்
சென்னை: என் வாழ்க்கையில் அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு எனக்கு எல்லாமே என் நண்பன் விஷால்தான். இளையதளபதி அது இதெல்லாம் சும்மா, என்று கண்கலங்கினார் நடிகரும் விஜய்யின் தம்பியுமான விக்ராந்த். விக்ராந்த்... நடிகர் விஜய்யின் ரத்த சொந்தம். சித்தி மகன். அவர் கற்க கசடற படத்தில் அறிமுகமான போதே, விஜய்யின் தம்பி என்றுதான் தன்னை காட்டிக் கொண்டார். படத்திலும் விஜய்க்கு ஏக பில்டப் தரும் காட்சிகள் உண்டு.

அதன் பிறகு, எங்கள் ஆசான், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தார். நட்சத்திர கிரிக்கெட்டில் செஞ்சுரி அடிக்க முடிந்த அவரால், சினிமா நட்சத்திரமாக திரையில் ஜெயிக்க முடியவில்லை. இந்த நேரத்தில்தான் விஷால் அவருக்குக் கைகொடுத்தார். தான் மிகுந்த நெருக்கடியில் இருந்த போதும், தன்னைவிட மிகவும் நெருக்கடியில், கிட்டத்தட்ட பூஜ்யத்திலிருந்த விக்ராந்துக்கு தன் சொந்தப் படமான பாண்டிய நாட்டில் சிறு வேடம் கொடுத்தார். அதன் விளைவு இன்று விக்ராந்துக்கு நல்ல பெயர். அத்துடன் நிற்கவில்லை விஷால். 

தன் சொந்தப் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தில் முழு ஹீரோவாக விக்ராந்தையே நடிக்க வைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார். இத்தனையும் சேர்த்து விக்ராந்தை நெக்குருக வைத்துவிட்டது. உங்க சொந்த அண்ணன் இளையதளபதி செய்யாததை, இந்த அண்ணன் விஷால் செய்திருப்பது குறித்து? என கேட்டபோது, "நான் உண்மையிலேயே சொல்றேன்.

 விஷால் என்னை ஹீரோவா வெச்சு படம் பண்றார்ங்கிறதுக்காக சொல்லல. நானும் விஷாலும் 12 வருஷமா ப்ரெண்ட்டா இருக்கோம். என்னோட அப்பா, அம்மா, என்னோட மனைவி, குழந்தைக்கப்புறம் அவனுக்குத்தான் எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிருக்கு. அதனால தான் என்னை வெச்சி படம் பண்றேன்னு சொல்றாப்ல. மத்தபடி ‘இளையதளபதி' அது இதெல்லாம் சும்மா... அதையெல்லாம் பேச விரும்பல," என்றார்.
Tags: ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply