Type Here to Get Search Results !

அஜித்-கவுதம் மேனன் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது




சென்னை

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

'வீரம்' படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் அஜித்  ஒப்பந்தமானார் . அஜித்துக்கு இது  55-வது படம். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து படத்தினைப் பற்றிய பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தமாகி இருப்பதாகவும். அரவிந்த்சாமி, அருண்விஜய் மற்றும் பலர் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு டான் மக்கர்தூர் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், படக்குழு இது குறித்து எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை உருவாக்கும் முதற்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் முதலில் இசையமைப்பதாக அறிவிப்புகள் வெளிவந்தாலும், தற்போதுள்ள தகவல் படி அனிருத் தான் இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளார் என்றும் சொல்கிறார்கள்.  

இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று காலை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின்  வளசரவாக்கத்தில் உள்ள சாய் பாபா கோவிலில் வைத்து நடைபெற்றது. இப்பூஜையில் அஜித் கலந்து கொள்ளவில்லை. 11-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்தபடத்தில்  அஜித் இந்தப் படத்துக்காக சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை மாற்றி இளமையாக காட்சியளிக்க உள்ளார். இதற்காக தினமும் ஜிம்மில் பல மணி நேரம் உடற்பயிற்சியும் செய்கிறார். அதன் பலனாக கிட்டதட்ட 7 கிலோ எடையை குறைத்துள்ளார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.