ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து இருக்கும் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. குட் மற்றும் evil என அஜித் இரண்டு விதமாக நடித்து இருக்கிறார் என இயக்குனர் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதனால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ரன் டைம்
மேலும் துணிவு படத்தின் ரன்டைம் இதுவரை வெளியாகாமல் தான் இருந்தது. இன்னும் சென்சார் பணிகள் முடிவடையவில்லை என்பதால் தான் தற்போது வரை ரிலீஸ் தேதியையும் அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி துணிவு ரன்டைம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் என உறுதியாகி இருக்கிறது.