ஒரு எஸ்எம்எஸ்ஸில் வாய்ப்பை இழந்தேன் - சூர்யா


சென்னை: இயக்குநர் ராஜேஷுடன் பணியாற்ற வேண்டிய வாய்ப்பை ஒரு எஸ்எம்எஸில் இழந்தேன், என்றார் நடிகர் சூர்யா.  

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசுகையில், "இது காதலும், நகைச்சுவையும் கலந்த கதை. பல்வேறு மனநிலைகளில் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை சிரிக்க வைப்பது சாதாரண விஷயம் அல்ல.  

வசனம் பேசும்போது, எங்கே இடைவெளி கொடுக்க வேண்டும்? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  

இந்தப் படத்தின் இயக்குநர் ராஜேஷுடன் நான் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் ஒரு எஸ்எம்எஸ்ஸில் அந்த வாய்ப்பு போய்விட்டது. 

நடிக்கும்போதும், ‘டப்பிங்' பேசும்போதும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த படத்தின் காட்சிகளையும், வசனங்களையும் கார்த்தி எங்கள் வீட்டில் நடித்துக் காட்டுவான். 

அந்த அளவுக்கு இந்த படம் அவனை கவர்ந்து இருக்கிறது. அதனால்தான் 102 டிகிரி காய்ச்சலில் படுத்திருந்தவன், இந்த விழாவுக்கு வந்திருக்கிறான்,'' என்றார் சூர்யா. -  


Tags: ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply