பிரபல நடிகரை செருப்பால் அடித்த நடிகை!


பிரபுதேவா இந்தியில் ஆர்.ராஜ்குமார் என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் ஹீரேவாக ஷாகித் கபூரும் கதாநாயகியாக சோனாஷி சின்காவும் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாள் முதலே இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகாததாலோ என்னவோ இருவரும் எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்களாம்.


இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ளும் போதெல்லாம் பிரபுதேவா சமாதானம் செய்திருக்கிறார். இந்நிலையில் ஷாகித் மீது செருப்பை வீசுவது போன்ற காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. ரிகர்சல் பார்க்கும் போது சரியாக செருப்பை வீசிய சோனாக்ஷி நிஜ காட்சி எடுக்கும் போது வேண்டும் என்றே ஷாகித்தை குறி பார்த்து வேகமாக எறிந்துள்ளார்.

செருப்பு அவரது மர்ம உறுப்பு பகுதியில் பட்டதால் வலியால் துடித்துள்ளார். ஆனால் எதுவுமே நடவாதது போல் கண்டு கொள்ளாமல் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டாராம் சோனாக்ஷி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகியிருக்கி விட்டாலும் சோனாக்ஷி மீது செம கடுப்பில் இருக்கிறாராம் ஷாகித்.
Tags:

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply