அஜீத்தை திருமணம் செய்ய ஆசையாக உள்ளது: புதுமுக நடிகை ப்ரீத்தி


சென்னை: அஜீத் குமாரை திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருக்கிறது. ஆனால் அவருக்கு தான் திருமணமாகிவிட்டதே என்று நடிகை ப்ரீத்தி தாஸ் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கோலிவுட்டுக்கு வந்திருப்பவர் ப்ரீத்தி தாஸ். அவர் மறுமுகம், உயிருக்கு உயிராக ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் கூறுகையில், நான் மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது தான் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதையடுத்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடிக்க உள்ளேன். நான் மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவள். அதனால் கவர்ச்சி காட்டுவதில், உதட்டில் முத்தம் கொடுப்பதில் தயங்க மாட்டேன்.

 அஜீத் சாருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. அவரை திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் உள்ளது. ஆனால் அவருக்கு தான் திருமணமாகிவிட்டதே. தமிழில் அனைத்து ஹீரோக்களுடனும் நடிக்க விரும்புகிறேன். நான் அழகாக உள்ளேன். நன்றாகவும் நடிப்பேன். எனக்கு தமிழ், இந்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் பேசத் தெரியும் என்றார்.


Tags: , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply