Type Here to Get Search Results !

தயாரிப்பாளர் விஷாலுக்கு பின்னால் இருக்கும் விஜயகாந்த்




சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அறிவுரைப்படி தயாரிப்பாளரான விஷால் பாண்டியநாடு வெற்றியால் தற்போது மகிழ்ச்சியாக உள்ளார். விஷால் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பாண்டியநாடு படம் ஹிட்டானதால் அவர் மகிழ்ச்சியில் இல்லை இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார். காரணம் படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான். மேலும் படத்தின் சாட்டிலைட் உரிமமும் நல்ல விலைக்கு சென்றுள்ளது. 

விஷாலின் இந்த மகிழ்ச்சிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அறிவுரை தான் காரணமாம். தான் நடித்த மதகஜராஜா படத்தின் வினியோகதஸ்ராக ஆனார் விஷால். அந்நேரத்தில் விஜயகாந்த் விஷாலை அணுகி தயாரிப்பாளராக மாறுமாறு அறிவுரை வழங்கியுள்ளாராம். மேலும் தான் தயாரிப்பாளராக மாறிய அனுபவங்களையும் விஜயகாந்த் விஷாலிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் வருவது வரட்டும் என்று விஷால் தயாரிப்பாளராக மாறினாராம்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.