ஸ்ருதிஹாஸன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் மனைவி?
மும்பை: பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவரின் மனைவி ஏற்பாட்டில்தான் ஸ்ருதி ஹாஸன் தாக்கப்பட்டதாக பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன மும்பை மீடியாவில். ஸ்ருதி ஹாஸன் வீட்டிலிருந்த போது அவரை மர்ம மனிதன் தாக்கிவிட்டு ஓடியது தெரிந்ததே. 

இதுகுறித்து ஸ்ருதிஹாஸன் முதலில் போலீசில் புகார் செய்யவில்லை. காரணம், அந்த தாக்குதல் நடந்தபோது, அவர் வீட்டில் ஒரு பிரபல இந்தி நடிகர் இருந்ததாகவும், புகார் செய்தால இந்த விவகாரம் வெளியில் வந்துவிடும் என்று அஞ்சியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தாக்குதல் குறித்து நேற்றுதான் போலீசில் புகார் செய்தார் ஸ்ருதிஹாஸன். ஆனால் இப்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் அதிர வைத்துள்ளது. கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார் ஸ்ருதி என்றும் இதற்கு ஒரு பிரபல கான் நடிகர்தான் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதைவிட அதிர வைக்கும் விஷயம், ஸ்ருதியைத் தாக்க இந்த நபரை ஏவியவர் அந்த நடிகரின் மனைவிதானாம். ஸ்ருதி புகார் தந்ததுமே, அந்த நடிகர் ஸ்ருதியைத் தொடர்பு கொண்டு, இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள். இல்லாவிட்டால் என் பெயர் நாறிவிடும், என வற்புறுத்தினாராம். அபார்ட்மென்ட்டில் உள்ள அனைவரும் பார்க்கும் வகையில் ஸ்ருதியுடன் பிரச்சினை செய்ய வேண்டும் என்று சொல்லித்தான் அந்த நபரை நடிகரின் மனைவி ஏற்பாடு செய்திருந்தாராம். அவர் நினைத்தது கிட்டத்தட்ட இப்போது நடந்துவிட்டது. 


ஸ்ருதி தாக்கப்பட்டதை விட, அதன் பின்னணி பற்றித்தான் அதிகம் பேச ஆரம்பித்துள்ளனர். முக்கிய பத்திரிகைகளின் நிருபர்களுக்கு இந்த விஷயத்தை நடிகரின் மனைவியே போன் போட்டு சொன்னதும் அம்பலமாகியுள்ளது. "நடிகருடனான தொடர்பை ஸ்ருதி இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால், நிச்சயம் அடுத்தமுறை நானே நேரில் வந்து அனைவருக்கும் தெரியும் வகையில் சண்டை போடவும் தயங்கமாட்டேன்... என் கணவருடன் சேர்ந்து அவரது கள்ளத் தொடர்புகளும் அம்பலமாகட்டும்," என்றும் எச்சரித்துள்ளாராம் நடிகர் மனைவி. 

இந்தத் விவரங்கள் இப்போது தமிழ்ப் பத்திரிகைகள் மத்தியிலும் பரவ ஆரம்பித்துள்ளது. 
Tags:

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply