போங்கடீ நீங்களும் உங்க காதலும்... அட, இது ஒரு படத்தோட பேருங்க...!
படத்துக்குத் தலைப்பு போங்கடீ நீங்களும் உங்க காதலும் என்று வைத்திருந்தாலும், இது பெண்களுக்கு எதிரான தலைப்பு இல்லை என்று நடிகரும் அப்படத்தின் இயக்குநருமான ராமகிருஷ்ணன் கூறினார். கோரிப்பாளையம், குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் ஆகிய படங்களில் நடித்தவர் ராமகிருஷ்ணன். இவர் முதல் முறையாக நடித்து இயக்கியுள்ள படம் போங்கடீ நீங்களும் உங்க காதலும். இந்தப் படத்தில் அவருடன் ஆத்மியா, காருண்யா மற்றும் ஜெயப்ரகாஷ் நடித்துள்ளனர். தமிழ்ப் படம் கண்ணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இயக்குநர்கள் பாக்யராஜ், மிஷ்கின், சேரன், கரு பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று வெளியிட்டனர். பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நாயகனும் இயக்குநருமான ராமகிருஷ்ணன் பேசுகையில், "தலைப்பு இப்படி வைத்திருந்தாலும் இது பெண்களுக்கு எதிரான படமல்ல. இன்னும் சொல்லப் போனால் பெண்களை அக்கறையோடு எச்சரிக்கும் வகையில் இந்தத் தலைப்பு அமைந்துள்ளது. 

பெண்கள் தொடர்ந்து தவறான நபர்களை நம்பி மட்டுமே தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கின்றனர். ஒருமுறை அனுபவப்பட்ட பிறகும்கூட மீண்டும் அதே தவறைச் செய்கின்றனர். அதை ஒரு பெற்றோரின் பார்வையில் சொல்லும் படம்தான் இந்த போங்கடீ நீங்களும் உங்க காதலும். இந்தப் படத்தின் காட்சிகள் எதிலும் பெண்களை இழிவுபடுத்தவில்லை. உயர்வாகவே சித்தரித்துள்ளேன். ஆண்களைத்தான் திட்டியுள்ளேன். இந்த சமூகத்தில் பெண்கள் இல்லாமல் எதுவுமே இல்லை. ஆனால் அவர்களைத்தான் தொடர்ந்து அவமதிக்கிறார்கள். ஒரு கணவன் தன் மனைவியைப் புகழக் கூட தயங்குகிறான். எதுவுமே அருகிலிருக்கும்போது அதன் அருமை புரிவதில்லை," என்றார். 
Tags:

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply