Type Here to Get Search Results !

இயக்குநர் கவுதம் மேனன் மீது மோசடிப் புகார்!



இயக்குநர் கவுதம் மேனன் மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார் விண்ணைத் தாண்டி வருவாயா பட தயாரிப்பாளர் ஜெயராமன். சிம்பு - த்ரிஷா நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா' என்ற திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கியிருந்தார். ஜெயராமன் தயாரித்தார். தமிழில் வெளிவந்த இந்த படத்தை இந்தியில் ‘டப்' செய்ய கவுதம் மேனன் முடிவு செய்தார். ரேஷ்மா கட்டாலா என்பவர் உதவியுடன் போட்டான் கதாஸ் நிறுவனம் மூலம் டப்பிங் செய்யும் பணி நடந்தது.

இந்த படத்தை இந்தியில் ‘டப்' செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.99 லட்சம் ‘ராயல்டி' தர வேண்டும் என்று படத் தயாரிப்பாளர் ஜெயராமன் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதை கவுதம் மேனன் ஏற்கவில்லை. இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற உதவியை அவர் நாடினார். 


போலீசார் வழக்குபதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். அதன்பேரில் மாஜிஸ்திரேட், போலீஸ் துணை கமிஷனர் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் ஜெயராமன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். 


இதையடுத்து ஐகோர்ட்டு நீதிபதி போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜான் அருமைநாதன் வழக்குப்பதிவு செய்தார். இயக்குனர் கவுதம்மேனன், ரேஷ்மா கட்டாலா, சசிகலா தேவி உள்ளிட்ட 5 பேர் மீது மோசடி செய்தல், ஏமாற்றுதல், 406, 417, 419, 426 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.