காவி உடை தரித்து ருத்ராட்ச மாலையுடன் இமயமலை சென்ற நயன்தாரா
சிம்புவுடன் 'இது நம்ம ஆளு' மற்றும் உதயநிதியுடன் 'நண்பேண்டா" படங்களில் நடித்து வரும் நயன்தாரா திடீரென காவி உடை தரித்து இமயமலைக்கு சென்றதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாரா சமீபத்தில் ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

அந்த படத்தில் படப்பிடிப்பு டேராடூனில் சென்ற வாரம் நடந்தது. படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழுவினர் எல்லோரும் சென்னை திரும்பிவிட்டனர்.

 ஆனால் நயன்தாரா, தான் இங்கிருக்கும் சில கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு பின்னர் வருவதாக கூறிவிட்டார். படக்குழுவினர் சென்ற பின்னர் நயன்தாரா, காவி உடை தரித்து, கழுத்தில்ருத்ராட்சத மாலை அணிந்து ஒரு சாமியாரிணி போன்ற தோற்றத்துடன் ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற பகுதிகளுக்கு சென்றார். 

அங்குள்ள சப்தரிஷி என்ற ஆசிரமத்திற்கு சென்ற அவர் நீண்ட நேரம் ஆழ்நிலை தியானம் செய்ததாகவும் கூறப்படுகிறாது. நீலகண்ட மகாதேவர், சப்தசரோவர், லட்சுமணன் சூலம், ரெமிமேபர், கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்ட நயன்தாரா, கார் செல்ல முடியாத சிலஇடங்களுக்கு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார்.
Tags: , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply