Type Here to Get Search Results !

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆசை. த்ரிஷா பேட்டி.




கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகளில் ஒருவர் திரிஷா. "என்றென்றும் புன்னகை' மூலம் இளைஞர்களின் மனதை மறுபடியும் ஒரு முறை கொள்ளையடித்த திரிஷாவுடன் ஒரு சந்திப்பு.

பத்து வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான ஹீரோயின். எப்படி உணர்கிறீர்கள்? 

நேற்று நடிக்க வந்தவள் போலவே உணர்கிறேன். "மெüனம் பேசியதே'யில் நாயகியாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து பதினோரு வருடங்கள் முடித்து பன்னிரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். நேற்றுதான் "மெüனம் பேசியதே'யில் நடித்தது போலிருக்கிறது. பதினோரு வருடங்கள் சீக்கிரமாகக் கடந்துவிட்டதை நம்பமுடியவில்லை. எந்த ஒரு படம் நடிக்கும் போதும் முதல் படம் போலவே உணர்ந்து நடிப்பது எனது ஸ்பெஷல் என நினைக்கிறேன். பெரிதாக சாதித்த உணர்வு, வீண் பெருமிதம் எல்லாம் இல்லை. ஆனால், சந்தோஷமாக உணர்கிறேன். நடிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

தமிழ் சினிமாவில் உங்களுக்கு ஒரு சிறு இடைவெளி விழுந்து விட்டதே... தமிழ் சினிமாவை வேண்டுமென்றே நீங்கள் தவிர்ப்பதாக சில வதந்திகள் உங்களைச் சுற்றி இருப்பது தெரியுமா? 

தமிழ் சினிமாவை நான் நேசிக்கிறேன். இந்த இடைவெளி எதேச்சையாக விழுந்த ஒன்று. "சமர்' "என்றென்றும் புன்னகை' இடையேயான ஒரு வருடம் பெரிய இடைவெளி போல என் ரசிகர்களை உணரவைத்திருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். நான் தமிழ் சினிமாவைத் தவிர்ப்பதாகவோ, தமிழ் சினிமாவில் எனக்கு வாய்ப்புக்கள் இல்லை என்று வருகின்ற செய்திகள் எல்லாம் வெறும் வதந்திகள். ரசிகர்கள் என்னை நம்பத்தயாராக உள்ளனர். ஆனால், மீடியா என்னை நம்பத் தயாராக இல்லை.

இளம் ஹீரோக்களுடனும், வயதான ஹீரோக்களுடனும் பெருமளவில் நடித்துள்ளீர்கள். இவர்களிடையே ஏதாவது வித்தியாசத்தை உணர்கின்றீர்களா? 

வித்தியாசம் பெரிதாக இல்லை. ஆனால், ஒற்றுமை என்னவென்றால் அனைவருமே கடின உழைப்பாளிகள். செய்யும் தொழிலுக்கு நேர்மையானவர்கள். ஒரே ஒரு வேறுபாடு, வயதான நடிகர்களுக்கு அனுபவம் அதிகம். அவர்களுக்கு சினிமா சார்ந்த புரிதல் அதிகம். அதற்காக இளைய நடிகர்கள் வயதான நடிகர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்களல்ல. நான் எந்த நடிகருடனும் நடிக்கத் தயாராக உள்ளேன். வயதிற்கும் நடிப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இவர்களின் வளர்ச்சியை ஒரு அனுபவ நடிகையாக எப்படிப்பார்க்கிறீர்கள்? 

ரொம்ப பிரமிப்பா இருக்கு. இவர்களின் அனைத்துப் படங்களையும் பார்த்தேன். அற்புதமா பண்றாங்க. அவர்களின் கதைத்தேர்வு, நடிப்பு என அனைத்துமே அற்புதம். ஒரு நடிகனின் பலமே தனக்கு தகுந்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், தனக்கு எது சரியாக வரும், எது சரியாக வராது என அறிந்து கொள்வதிலும் தான் உள்ளது. விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் இந்த விஷயத்தில் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன்.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இவர்களின் வளர்ச்சியை ஒரு அனுபவ நடிகையாக எப்படிப்பார்க்கிறீர்கள்? 

ரொம்ப பிரமிப்பா இருக்கு. இவர்களின் அனைத்துப் படங்களையும் பார்த்தேன். அற்புதமா பண்றாங்க. அவர்களின் கதைத்தேர்வு, நடிப்பு என அனைத்துமே அற்புதம். ஒரு நடிகனின் பலமே தனக்கு தகுந்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், தனக்கு எது சரியாக வரும், எது சரியாக வராது என அறிந்து கொள்வதிலும் தான் உள்ளது. விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் இந்த விஷயத்தில் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன்.


இன்னும் எத்தனை வருடங்கள் சினிமாவில் இருப்பதாக உத்தேசம்? 

நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் சில பரீட்சார்த்தமான படங்கள் செய்ய விரும்புகிறேன். மசாலாப்படங்கள் போதும் போதும் என்கிற அளவிற்கு செய்தாகிவிட்டது. நடிப்பிற்குத் தீனி போடக் கூடிய சிறந்த படங்களை எதிர்பார்த்திருக்கிறேன். எது எப்படியோ நடித்துக்கொண்டிருப்பேன் என்பது மட்டும் உண்மை.


இப்போதுள்ள நடிகைகளில் உங்களுக்குப் பிடித்தவர்? 

எல்லோருமே அற்புதமான பெண்கள். இப்போதுள்ள இளம் நடிகைகள் யாருக்குமே வெட்டிபந்தாவோ, வீண் பேச்சுக்களோ இல்லை. தமது கிரீடங்களை கழற்றி வைத்துவிட்டு மிக இயல்பாக இருக்கிறார்கள். நாங்கள் எப்போதாவது தான் சந்திப்போம். சந்திக்கும் வேளைகளில் ஜாலியாக இருப்போம். தமன்னா, காஜல், அனுஷ்கா, நயன் ஆகியோர் என் நெருங்கிய தோழிகள். என்னால் எல்லோருடனும் பழக முடியும் என்பதால் அனைவருமே என்னை நேசிக்கிறார்கள் என நினைக்கிறேன். நானும் அவர்களை நேசிக்கிறேன். எந்த ஈகோவும் இல்லாமல் சகோதரிகள் போலப் பழகுவோம். சந்திக்கும் வேளைகளில் சினிமா பற்றி பேச மாட்டோம். ஜாலியாகவும் கேலியாகவும் கல்லூரி மாணவிகள் சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வதுபோலத்தான் பேசுவோம்.


உங்களைச் சுற்றியுள்ள இந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டுத்தான் ஆக வேண்டும். கல்யாணம் எப்போது? 

கல்யாண வேளை வரும் போது கண்டிப்பாக நடக்கும்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.