சிம்பு- ஹன்சிகா காதல் ஒரு திட்டமிட்ட நாடகமா? அதிர்ச்சி தரும் உண்மைகள்.
கடந்த வருடம் சிம்புவும் ஹன்சிகாவும் காதலிப்பதாக அதிகாரபூர்வமாக தங்கள் டுவிட்டர் பக்கங்களில் அறிவிப்பு செய்தார்கள். அதன்பின்னர் அவர்கள் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி தங்கள் காதலை வளர்த்துக்கொண்டதாகவும், பின்னர் நயன்தாரா வருகையால் திடீரென காதலை முறித்துக்கொண்டதாகவும் மீண்டும் இருவரும் ஆளுக்கொரு அறிக்கை கொடுத்து பிரிந்துவிட்டனர். இதில் எந்த உள்குத்தும் இல்லை என்பது போல் தெரிந்தாலும், இந்த காதலே ஒரு நாடகம்தான் என்று செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது பிரபல ஆங்கில புலனாய்வு பத்திரிகை ஒன்று. கடந்த வருடத்தில் சிம்புவுக்கு படம் ஒன்று செட் ஆகவில்லை. 


வாலு, வேட்டை மன்னன் இரண்டுமே படப்பிடிப்பை முடிக்க முடியாமல் திணறிவந்தது. இரண்டாம்தர இயக்குனர்கள் கூட சிம்புவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க யோசித்தனர். கொன்சம் கொஞ்சமாக சிம்புவை திரையுலகம் மறக்க தொடங்கியது. இந்த நேரத்தில்தான் ஒரு சீனியர் நடிகரின் அட்வைஸ்படி ஏதாவது ஒரு முக்கிய நடிகையிடம் காதல் என்று செய்தியை பரப்பிவிட்டால், உன்னை பற்றி செய்தி பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் பரபரப்பாக வரும். 


அந்த பப்ளிசிட்டியை வைத்து மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம் என்ற ஐடியாவை கொடுத்துள்ளார். எனவே வாலு படத்தில் நடித்த நட்பு காரணமாக இந்த செட்டப் காதலுக்கு கைகொடுத்துள்ளார் ஹன்சிகா. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக பொய்ச்செய்தியை அவர்களே கிளப்பிவிட்டனர். இருவரும் நெருக்கமாக இருப்பதுபோன்று ஒருசில போஸ்களையும் கொடுத்து பத்திரிகைகளையும், இணையதளங்களையும் பரபரப்பு ஏற்படுத்தினர். 

இந்த ஐடியாவிற்கு உடனே பலன் கிடைத்தது. சிம்புவின் மார்க்கெட் உயர்ந்தது. அதுவரை சிம்புவை வைத்து படமெடுக்க தயங்கியவர்கள் வலிய வந்து வாய்ப்பு கொடுத்தனர். கவுதம் மேனன், பாண்டிராஜ், ஆகியோர்களிடம் இருந்து வந்த வாய்ப்புகள் எல்லாம் ஹன்சிகா காதல் மேட்டர் பப்ளிசிட்டியால் கிடைத்ததுதான். தாங்கள் நினைத்தது நிறைவேறியவுடன் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக மீண்டும் ஆளுக்கொரு அறிக்கை கொடுத்து நாடகத்தை யாருக்கும் தெரியாமல் முடித்துவிட்டனர். 

இதுதான் உண்மையில் நடந்தது என்று அந்த ஆங்கில புலனாய்வு பத்திரிகை தெரிவித்துள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று சம்மந்தப்பட்ட இருவருக்கு மட்டுமே தெரியும்.
Tags: , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply