கார்த்தி பக்கத்துல உட்கார்ந்தா, அவன் பொண்டாட்டி செருப்பால அடிப்பா..ஆபீஸ் நாயகிகளுடன் ஒரு அரட்டை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "ஆபீஸ்' சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட். ஷாட் முடிந்ததும் ஓய்வெடுக்கச் செல்கின்றனர் சூஸன், ஸ்ருதி, மது என்ற பெயரில் பூமியில் உலவிக் கொண்டிருக்கும் தேவதைகள்(?!). அவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தால், ஜாலியும் கேலியுமாக அரட்டைச் சத்தம் காதைக் கிழிக்கிறது. பேட்டி என்றதும் முதலில் பேச ஆரம்பித்தார் லட்சுமி என்ற மது. ""சென்னை மடிப்பாக்கம் தான் சொந்த ஊர். 

எத்திராஜ் கல்லூரியில் பிஏ ஆங்கில இலக்கியம் படிச்சேன். படிக்கும்போது நடனம், கவிதைனு தான் மேடை ஏறி இருக்கேனே தவிர, நடிப்புக்காக இல்லை. முதல்ல மக்கள் டிவியில் தொகுப்பாளராக வேலைபார்த்தேன். கல்லூரிக்கு தொடர்ந்து போக முடியாததால அந்த வேலையை விட்டுட்டேன்.

 படிப்பு முடிஞ்சதும் "ஆபீஸ்' வாய்ப்பு கிடைத்தது. இதுதவிர, விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகும் "தாயுமானவன்', புதுயுகம் டிவியில் ஒளிபரப்பாகும் "அக்னிப் பறவை' சீரியல்களிலும் நடிக்கிறேன். 


மேலும், சாம்சங், பூர்விகா மொபைல்ஸ், மலேசிய விளம்பரங்கள் பண்ணியிருக்கேன்'' என்றார். அடுத்து பேசியசூஸன், "" "மைனா', "அர்ஜூனன் காதலி', "ரா ரா', "நர்த்தகி'னு நாலு படங்கள் நடிச்சிட்டேன். அடுத்ததா "திமிரு-2', விஷ்ணு - பிந்து மாதவி கூட நடிச்சிகிட்டு இருக்கேன். இதுதவிர, தெலுங்குல ஒரு படத்துல ஹீரோயினா பண்ணியிருக்கேன். 


ஜீ தமிழில் "மாமியார் தேவை' சீரியல் பண்றேன். போலீஸ் டிரெஸ் போட்டே ஆகணும்னு எனக்கு வெறி இருந்தது. அந்த சீரியல்ல என்னுடைய ஆசை நிறைவேறியிருச்சி. "ஆபீஸ்' சீரியலின் இயக்குநர் பிரம்மாவும், ராமநாதனும் தான் என்னைக் கேமரா முன்னாடி அறிமுகம் பண்ணாங்க. அவங்க மூலமாத்தான் "மைனா' வாய்ப்பு கிடைத்தது'' என்றார். 

"படத்திலும், சீரியலிலும் வில்லி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்குகிறீர்களே... எப்படி?'
வில்லி கதாபாத்திரம் பண்றது எனக்கு ஈஸியா இருக்கு. என்னுடைய தோற்றமும் அதற்கு கச்சிதமா பொருந்துது. இதுவரைக்கும் வில்லியா மட்டும் தான் பண்ணியிருக்கேன். நானும் நல்ல பொண்ணா நடிக்கணும்னு ஆசை இருக்கு''. 


அடுத்ததாக பேசிய ராஜி என்ற ஸ்ருதி கூறியபோது, ""நாலைஞ்சி வருஷத்துக்கு முன்னாடி சினிமாவுல நடிச்சேன். மூன்றரை வருஷமா "தென்றல்' சீரியலும், ஒரு வருஷமா "ஆபீஸ்' சீரியலும் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போதைக்கு இது ரெண்டுக்குமே எனக்கு நேரம் சரியா இருக்கு'' சினிமா, சீரியல் எது பெஸ்ட் என்ற கேள்விக்கு பதிலளித்த சூஸன் ""சீரியல் தான் எனக்கு கம்பர்ட்டபிளா இருக்கு. 


காலையில போனா சாயந்தரம் வந்துடலாம். சத்தியமா மறுபடி சினிமாவில் நடிக்கிற ஆசை இல்லை. கனவுல கூப்பிட்டா கூட போக மாட்டேன். வேலை, குடும்பம் ரெண்டையுமே பார்த்துக்க சீரியல் தான் கரெக்டா இருக்கு'' என்றார். 


"நீங்க நடிக்குற "ஆபீஸ்' சீரியல் பத்தி சொல்லுங்க' என சூஸனிடம் கேட்டேன். ""கமர்ஷியல் சப்ஜெக்ட்டை சீரியலா எடுக்குறாங்களே... எப்படி போகப்போகுதோனு ஆரம்பத்துல சந்தேகமாகத்தான் இருந்தது. போகப்போக நிறைய பேர் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எல்லா சீரியலும் அழுகாச்சியா போகும்போது, இதுமட்டும் வித்தியாசமா இருக்கு. மற்ற எந்த சீரியல் கூடவும் இதை தைரியமா கம்பேர் பண்ணலாம்'' 


"ஹீரோயினா நடிக்க ஆசை இருக்கா?' . ""சத்தியமா இல்லை. நான் எப்படினு எனக்குத் தெரியும்'' "சூஸன், ஸ்ருதி பத்தி என்ன நினைக்குறீங்க?' - இந்த கேள்விக்கு பதிலளித்த மது ""சூஸன் பழகுறதுக்கு நல்ல பொண்ணு'' என அவர் ஆரம்பிக்க, ""சூப்பர்டா செல்லம், உனக்கு கண்டிப்பா ட்ரீட் தர்றேன்'' என சூஸன் சொல்ல, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் மது. ""அடிக்கடி என்னை செல்லமா பயமுறுத்துவா. ஆனாலும், என்னை ஒரு சகோதரி போல பார்த்துப்பா. இந்த சீரியல்ல ஸ்ருதி கூடத்தான் நிறைய சீன் இருக்கு. 


அவஸ்பாட்ல எல்லாரையும் எனர்ஜியா வைச்சிப்பா''. மதுவை பற்றி கமெண்ட் அடித்த சூஸன் . ""கேமரா முன்னாடி எப்படி ஜாலியா இருக்காளோ, அதே மாதிரிதான் நிஜத்துலயும் இருப்பா மதுமிளா. ஸ்ருதியைப் பத்தி சொல்ல நிறைய இருக்கு. "தென்றல்' சீரியல்ல "துளசி'யா தான் எனக்கு அறிமுகமானா. பார்த்ததும் தலைக்கனம் பிடிச்சவளா இருப்பாளோ, நம்மகிட்ட எப்படி பழகுவாளோனு நினைச்சேன். ஆனால், புதுமுகம் மாதிரி அவ்வளவு இயல்பா பழகுனா. நிறைய படங்கள் பண்ணியிருந்தாலும், அப்படி காமிச்சிக்கவே மாட்டா. 


நான் கூட வெளியில போகும்போது ஒரு கெத்து காமிப்பேன். இவளுக்கு அது வரவே வராது'' சூஸன் குறித்து கருத்து சொன்ன ஸ்ருதி: . ""நானும், சூஸனும் 3 வருஷமா நண்பர்கள். "தென்றல்' சீரியல்ல ஆட்டோக்காரினு சொல்லித்தான் இவளை அறிமுகம் பண்ணாங்க. நான், சூஸன், "தென்றல்' ஹேமா - மூணு பேரும் திரையில எப்படி தெரியுறோமோ, நிஜத்துலயும் அப்படிப்பட்ட நண்பர்கள் தான். எதுவா இருந்தாலும் ஷேர் பண்ணிப்போம்''. உங்க காதலர் கார்த்தி...' காதலரா? அது "சீரியல்ல தான்...' ""டயலாக்கைத் தாண்டி "ஹாய் பாய்' மட்டும் தான். அதைத் தாண்டி எதுவும் கிடையாது. 

இப்பகூட பாருங்க, அவன் எங்கயோ இருக்கான், நான் எங்கயோ இருக்கேன். அவன் பக்கத்துல உக்கார்ந்தா, அவன் பொண்டாட்டி வந்து செருப்பால அடிப்பா''
Tags: , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply