Type Here to Get Search Results !

அனிருத்துடன் காதல் இல்லை: பிரியா ஆனந்த்

பிரியாஆனந்தும் அனிருத்தும் காதலிப்பதாக செய்திகள் பரவின.

எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, இங்கிலீஷ் விங்கிலீஷ் உள்ளிட்ட படங்களில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக அரிமா நம்பி, விமல் ஜோடியாக ஒரு ஊர்வல ரெண்டு ராஜா, அதர்வாவுடன் இரும்புக் குதிரை, கவுதம் கார்த்திக்குடன் வைராஜாவை படங்களில் நடிக்கிறார்.

எதிர் நீச்சல், வணக்கம் சென்னை படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஏற்கனவே ஆன்ட்ரியாவும் அனிருத்தும் காதலித்தனர். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது அந்த காதல் முறிந்து அனிருத், பிரியா ஆனந்த் இடையே புது காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதை பிரியா ஆனந்த் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:–

என்னையும் அனிருத்தையும் இணைத்து வதந்திகள் பரவி உள்ளன. இதில் துளியும் உண்மை இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். வேறு எந்த உறவும் எங்களுக்குள் இல்லை. இது போன்று வதந்திகள் பரப்பு வதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரியா ஆனந்த் கூறியுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.