சென்னை அண்ணா சாலையில் நடிகர் அஜித்தை சுற்றி வளைத்த ரவுடிகள்


அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் அஜீத் 55 திரைப்படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பிக்க உள்ளனர். முதல்கட்டமாக சென்னை பாண்டிச்சேரி சாலை, ஈசிஆர் ரோட்டில் திரிஷா படுகொலை சம்பவத்தை படமாக்கினர். இரண்டாவது கட்டமாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும் படப்பிடிப்பை முடித்த கவுதம் மேனன் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் ஒருவார படப்பிடிப்பு நடத்த சென்னை காவல்துறையினர்களிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் பகலில் நடத்தினால் டிராபிக் பிரச்சனை ஏற்படும் என்பதால் இரவு 11 மணிக்கு மேல் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

த்ரிஷா கொலை சம்பவத்தில் கொலையாளிகளை கண்டுபிடிக்க துப்பு துலக்கும் அஜித் மற்றும் அனுஷ்காவை தீர்த்துக் கட்ட சென்னை அண்ணா சாலையில் வில்லன் கோஷ்டியினர் இருவர்களையும் மடக்குகின்றனர். ரவுடிகளிடம் வசமாக சிக்கிக் கொண்துள்ளனர் அனுஷ்காவும் அஜித்தும், கொலையாளிகளை அடையாளம் கண்டவுடன் அவர்களை அடித்து துவம்சம் செய்கின்றார் அஜீத். இந்த காட்சிகள் படு த்ரில்லிங்காக எடுக்க கவுதம் மேனன் முடிவு செய்துள்ளார். முதலில் அனுஷ்காவை வில்லன் துரத்துவது போன்றும், அவரை அஜீத் காப்பாற்றுவது போன்ற காட்சிகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் எந்த பகுதியில் எடுப்பது என்பது குறித்த ஆலோசனையில் கவுதம் மேனன் தனது உதவியாளர்களுடன் தற்போது ஈடுபட்டுள்ளார்.

இன்னும் 30% படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருப்பதால் இரண்டு மாதங்களுக்குள் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.


Tags: , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply