Type Here to Get Search Results !

கோலிவுட்டிலிருந்து பாலிவுட்க்கு தாவும் பவர் ஸ்டார்

தமிழ் திரையுலகில்  பல கலாய்ப்புகளை வாங்கியும் பல துன்பங்களுக்கு பிறகும் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு இப்போது ஹிந்தி படங்களிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது

அண்மையில் நடந்த வாலிப ராஜா படத்தின் பிரஸ் மீட்டில் பவர் ஸ்டாருக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை பற்றி படக்குழுவினர் பேசினர். பவர் ஸ்டார் இது தனக்கு கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு இதை பயன்படுத்தி கொள்வேன் என கூறினார்.

உலகநாயகன் கமலஹாசன் பவர் ஸ்டாரின் திறமையை பாராட்டினார்.மேலும் பவர் ஸ்டாரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என பிரஸ் மீட்டில் கூறினார்.

பவர் ஸ்டாருக்கு பல முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் தமிழ் திரையுலக மக்கள் அனைவரிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.