பூஜாவுக்காக காத்திருக்கும் இயக்குனர்


விளம்பர பட இயக்குனர் ராஜ் தயாரித்து, நடித்து, இயக்கும் படம் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’. இப்படத்தில் அபிஷேக்கிற்கு ஜோடியாக ‘மிஸ் இந்தியா ஸ்வேதா விஜய்’ நடித்துள்ளார். ஆர்யா தயாரித்து வெளிவராமல் இருக்கும் ‘படித்துறை’ படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவர் அபிஷேக். பூஜா கௌரவ வேடம் ஏற்றுள்ள  இப்படத்தை ராஜ் தனது ‘செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பூஜா பேசியது அரங்கையே கல கலப்பில் குலுங்க வைத்தது. அதில், “நான், இயக்குனர் ராஜ் இருவரும் காலேஜ்மெட். அது மட்டுமில்ல… பதினாறு வருஷத்துக்கு முன்னாடி என்னை உருகி உருகி காதலிச்சவன். நான் பெங்களூரில் கல்லூரியில் படித்தபோது ராஜை தெரியும். நான் பெண்கள் கல்லூரி. அவன் படித்தது ஆண்கள்-பெண்கள் படிக்கும் கோ-எட் கல்லூரி. ஒரு  கல்ச்சுரல்(cultural)-கலை நிகழ்ச்சியின்போது அவனைப் பார்த்தேன். அவனுக்கு என்னைப் பிடிக்கும். எங்களுக்குள் ஈர்ப்பு இருந்தது. ஆனால் அது காதல் இல்லை. அப்போது எனக்கு 16 வயதுதான். அப்போது காதல் பற்றி தெரியாத வயது. ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ன்னு ஒரு முறை சொன்னான். இன்னொரு முறை ஏதோ பேசினான். நான் ‘போடா’ன்னு சொன்னேன். எங்களுக்குள் நட்பு இருந்தது. ஆனால் காதல் இல்லை. எந்த ஆண் பையனுடன் பழக்கம் வேண்டாம் என்பது என் அப்பாவின் கண்டிப்பான உத்தரவு. படிப்புதான் முக்கியம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பார். அதனால் எனக்கு யார் கூடவும் காதல் இல்லை. அப்படித்தான் ஒரு ஆரோக்கியமான நட்பு எங்களுக்குள் இருக்கிறது என்றவர். ‘நமக்குள் ஒன்றும் இல்லைதானே?’ என்ற போது இயக்குனர் ராஜ், “இப்போதும் நான் உனக்காக காத்திருக்கிறேன். “என்றார்.
Tags: , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply