Type Here to Get Search Results !

உத்தம வில்லன்... கமலுக்கு ஜோடி காஜல் அகர்வால்!


ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த காஜல் அகர்வால் இப்போது சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வரூபம் 2 படத்தை முடித்த கையோடு கமல் அடுத்ததாக உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார். 

இதனை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிரிமாண்டமாக தயாரிக்கிறது. நடிகரும் கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் தமிழில் முதல் முறையாக இயக்கும் படம் இது.


 ஏற்கெனவே கமலை வைத்து கன்னடத்தில் இயக்கிவிட்டார் ரமேஷ் அரவிந்த். படத்திற்கு கிரேஸிமோகன் திரைக்கதை, வசனங்களை எழுதுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் கமலுக்கு ஜோடி காஜல் அகர்வால் என்பதை இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் காஜல் என்பது நினைவிருக்கலாம்.

 ஏன் இந்த மாற்றம்? "முதலில் அவர்கள் தேதி கேட்டது செப்டம்பரில். அப்போது என்னிடம் கால்ஷீட் இல்லை. ஆனால் இப்போது படம் நவம்பர் - டிசம்பருக்கு தள்ளிப் போயிருக்கிறது. அதனால் கால்ஷீட் கொடுத்துவிட்டேன்," என்கிறார் காஜல். 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.