தீபாவளிக்கு விஜய் படமும் வருது!


இது என்ன புதுக்கதை என்கிறீர்களா... விஜய் - மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தின் டீசரை வரும் தீபாவளியன்று வெளியாகிறது. 

தலைவா படம் வந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தாலும், அதில் விஜய் ரசிகர்களுக்கே திருப்தியில்லை. எனவே ஜில்லாவை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். நேசன் இயக்கும் இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக விஜய்-காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கின்றனர்.

 பூர்ணிமா பாக்யராஜ், சூரி, மங்காத்தாவில் நடித்த மகத் ஆகியோரும் உள்ளனர். அரசியல், பஞ்ச் என எதுவும் இல்லாமல், குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள ஜில்லாவுக்கு டி.இமான் இசையமைக்கிறார். 

பாடல்கள் மட்டும் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீஸர் வெளியிடத் திட்டமிட்டுள்ளது சூப்பர் குட் பிலிம்ஸ். 

இந்த தீபாவளிக்கு அஜீத் படம் மட்டும் வருகிறதே என்ற ஆதங்கத்திலிருந்த விஜய் ரசிகர்களுக்கு, விஜய் பட டீசர் அதே நாளில் வெளியாவது மகிழ்ச்சியைத் தந்துள்ளது


Tags: , ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply