சசிகுமாரின் உதவியாளர் இயக்கும் போர் செய்யப் பழகு!


இயக்குநரும் தயாரிப்பாளருமான சசிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எஸ்பி நரசிம்மன் புதிய படம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு போர் செய்யப் பழகு எனத் தலைப்பிட்டுள்ளார்கள்.


 மாஸ்டர் மூவி மேக்கஸ்' என்ற புதிய பட நிறுவனம் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. போர் செய்யப் பழகு படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். கே இசை அமைக்கிறார். இவர், யுத்தம் செய், ஆரோகணம், முகமூடி போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 படத்திற்கான நடிகர் - நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. விரைவில் படத்தின் மற்ற விவரங்கள் குறித்து அறிவிப்பேன் என இயக்குநர் எஸ்பி நரசிம்மன் தெரிவித்துள்ளார். சசிகுமாரின் உதவியாளர்களில் தனியாகப் படம் இயக்கும் இரண்டாவது நபர் நரசிம்மன். முதலில் தனியாகப் படம் செய்தவர் எஸ் ஆர் பிரபாகரன். அந்தப் படம்தான் சுந்தரபாண்டியன். 


Tags: ,

About cinediary

The Complete Movie Updates Kollywood,Tollywood,Bollywood,Hollywood,Actress Gallery,All Events.

0 comments

Leave a Reply